மியான்மர் விமானம் மீதான ட்ரோன் தாக்குதலில் 6 உக்ரைனியர், ஓர் அமெரிக்கருக்கு தொடர்பு: என்ஐஏ

டெல்லி நீதிமன்றத்தில் தகவல்
மியான்மர் விமானம் மீதான ட்ரோன் தாக்குதலில் 6 உக்ரைனியர், ஓர் அமெரிக்கருக்கு தொடர்பு: என்ஐஏ
Updated on
1 min read

புதுடெல்லி: இந்த ஆண்டு தொடக்​கத்​தில் இந்​தி​யா​வின் மிசோரம் எல்​லைப் பகு​தி​யில் மேத்யூ ஆரோன் வான்​டைக் என்ற அமெரிக்கரும், உக்​ரைனை சேர்ந்த 6 பேரும் ரகசி​ய​மாக முகாமிட்டு உள்​ளனர். அங்​கிருந்து மியான்​மருக்​குள் நுழைந்துள்ளனர். அந்த நாட்​டின் கிளர்ச்​சிக் குழுக்​களுக்கு ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தும் ஆயுத பயிற்​சியை அளித்து வந்​துள்​ளனர்.

கடந்த மார்ச் மாதம் மிசோரமில் அமெரிக்​கர் மேத்யூ ஆரோன் வான்​டைக்​கும், உக்​ரைனை சேர்ந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்​கள் டெல்​லி​ திஹார் சிறை​யில் அடைக்கப்பட்டு உள்​ளனர். இந்த வழக்கு தொடர்​பாக டெல்லி நீதி​மன்​றத்​தில் என்ஐஏ தரப்​பில் அண்​மை​யில் மனு தாக்​கல் செய்யப்பட்​டது.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த பிப்​ர​வரி 20-ம் தேதி மியான்​மரின் மியிட்​கி​னா​வில் இருந்து மாண்​டலே நகருக்கு சென்ற பயணி​கள் விமானம் மீது இரு மர்ம ட்ரோன்​கள் தாக்​குதல் நடத்தின. இந்த ட்ரோன் தாக்​குதலில் அமெரிக்​கர் மேத்யூ ஆரோனுக்​கும் 6 உக்​ரைனியர்​களுக்​கும் தொடர்பு உள்​ளது.

இவர்​கள் ஐரோப்​பா​வில் இருந்து சட்​ட​விரோத​மாக மியான்​மருக்கு ட்ரோன்​களை கடத்தி சென்​றுள்​ளனர். இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்​படும் சில தீவிர​வாத குழுக்​களுக்கு இவர்​கள் பயிற்சி அளித்​திருப்​ப​தாகத் தெரி​கிறது.

இந்த வழக்கு தொடர்​பாக அமெரிக்​காவை சேர்ந்த மேத்யூ ஆரோன், உக்​ரைனை சேர்ந்த விக்​டரிடம் விசா​ரணை நடத்த வேண்​டும். இதற்கு நீதி​மன்​றம் அனு​மதி வழங்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. இந்த மனுவை பரிசீலித்த சிறப்பு நீதிபதி பிர​சாந்த் சர்​மா, மேத்யூ ஆரோன், விக்டரிடம் என்ஐஏ அதி​காரி​கள்​ வி​சா​ரணை நடத்​த அனு​ம​தி வழங்​கி​னார்​.

மியான்மர் விமானம் மீதான ட்ரோன் தாக்குதலில் 6 உக்ரைனியர், ஓர் அமெரிக்கருக்கு தொடர்பு: என்ஐஏ
முதல்வருக்கான புதிய அலுவலகம் ரூ.5.54 கோடி மதிப்பீட்டைவிட 32% குறைவாக டெண்டர்: விரைவில் ஒப்பந்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in