உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
Updated on: 
1 min read

பெங்களூரு: பெங்​களூரு மத்​திய குற்​றப்​பி​ரிவு போலீஸ் இன்ஸ்பெக்​டர் அருண்​குமார் சலுங்கே, தனது நண்​பரும் தொழிலதிபருமான பிரதாப், சங்​கர் கவுடா, சுதீர், நடராஜா ஆகியோ​ருடன் சில தினங்​களுக்கு முன்பு உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்திற்கு சென்​றார்.

நேற்று பிற்​பகல் 1.30 மணிக்கு தன் நண்​பர்​களு​டன் அங்​கிருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் டேராடூனுக்கு புறப்​பட்​டார். கேப்டன் ஹிமான்ஸூ இயக்​கிய இந்த ஹெலிகாப்​டர் சுமார் 2.20 மணி​யளவில் ஜோஷிமத் மலைப்​பகுதி​யில் சென்று கொண்டிருந்தது. அப்​போது மோச​மான வானிலை காரண​மாக‌ கட்​டுப்​பாட்டை இழந்த ஹெலிகாப்​டர் கீழே விழுந்து விபத்​தில் சிக்​கியது. இந்த விபத்​தில் கேப்​டன் ஹிமான்ஸூ, போலீஸ் இன்ஸ்​பெக்​டர் அருண் சாலுங்கே உட்​பட 6 பேரும் சம்​பவ இடத்​திலேயே உயிரிழந்தனர்.

மோசமான வானிலை

இது​குறித்து கர்​நாடக துணை முதல்​வர் பரமேஷ்வரா கூறுகை​யில், “இந்த விபத்து குறித்து சம்​பவம் நிகழ்ந்த சாமோஜி மாவட்ட ஆட்சி​யர் கவுரவ் குமாருடன் பேசினேன். விபத்து நிகழ்ந்த ஜோஷிமத் மலைப்​பகுதி​யில் நில​விய மோச​மான வானிலை காரண​மாக இந்த விபத்து நிகழ்ந்​திருக்​கலாம் என தெரி​வித்​தார்.

உயி​ரிழந்த 6 பேரை​யும் மீட்​கும் பணிகள் நடந்து வரு​கின்​றன. பெங்​களூருவை சேர்ந்த 5 பேரின் உடல்​களை​யும் சொந்த ஊருக்கு கொண்டு வரு​வதற்​கான பணிகளை முடுக்கி விட்டுள்ளோம்” என்​றார்.

உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
ஞானேஷ் குமாருக்கு எதிரான ‘பொது கண்டன விசாரணை’ ஒத்திவைப்பு: ராகுல் தகவல்

X