ஜார்க்கண்டில் யானைகள் தாக்கி 6 பேர் உயிரிழப்பு

ஜார்க்கண்டில் யானைகள் தாக்கி 6 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் ஹஸாரிபாக் மாவட்டத்தில், காட்டு யானைகள் கூட்டம் நேற்று ஊருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.

கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பொதுமக்களைத் தாக்கி வரும் யானைக் கூட்டம், வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த நிலையில், ஒரு சிறுவன் படுகாயமடைந்தான். அவன் சிகிச்சைக்காக ஹஸாரிபாக் சதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

ஜார்க்கண்டில் யானைகள் தாக்கி 6 பேர் உயிரிழப்பு
விவசாயிகள் வைக்கோல் எரிப்பது குறைந்தது: மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in