பிஹாரில் நாளை 3-ம் கட்ட தேர்தல்

பிஹாரில் நாளை 3-ம் கட்ட தேர்தல்
Updated on
1 min read

பிஹார் சட்டப்பேரவைக்கு ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக 49 தொகுதிகளுக்கு கடந்த 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக டந்த 16-ம் தேதி 32 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் 3-ம் கட்டமாக 50 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு நடக்கிறது. இதில் மொத்தம் 808 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 50 தொகுதிகளிலும் ஒரு கோடியே 45 லட்சத்து 18 ஆயிரத்து 705 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 13,648 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

நான்காம் கட்ட தேர்தல் நவம்பர் 1-ம் தேதியும் இறுதிகட்ட தேர்தல் நவம்பர் 5-ம் தேதியும் நடைபெற உள்ளன. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in