டெல்லியில் 4 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை

டெல்லியில் 4 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை
Updated on
1 min read

வடமேற்கு டெல்லி கேசவபுரம் பகுதியில் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது சிறுமி, புதரில் கைவிடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

சிறுமியின் கன்னங்களில் பிளேடினால் கீறப்பட்ட ரத்தக்காயம் இருந்தது. சிறுமி கடந்த வெள்ளியன்று தன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது இந்த கொடூர சம்பவம் நடந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுமி காணாமல் போனதையடுத்து தாயார் வீடு வீடாகச் சென்று தேடியுள்ளார். பிறகு குடும்ப உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதரில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in