

கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் கரோனா வைரஸ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கட்டுக்குள் வரும் என்றும் இதுவரை 30 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளதாகவும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பை கண்காணிக்கவும் அதைக் கட்டுப்படுத்தவும் ‘இந்திய தேசிய சூப்பர்மாடல்’ என்ற பெயரில் மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
இதில் ஐஐடிகள் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகள் உள்ளிட் டோர் உறுப்பினர்களாக உள்ள னர். இக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கரோனா வைரஸ்பாதிப்பின் உச்சம் கடந்துவிட்டது.சுகாதாரத் துறையின் வழிகாட்டு தல்படி கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிடும்.
அதேநேரம் குளிர்காலம் மற்றும் பண்டிகைக் காலம் வருவதால், கவனக்குறைவாக இருந்துவிட்டால் பாதிப்புமீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதுவரை 30 சதவீத மக்களுக்கு மட்டுமே கரோனா எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.எனவே, பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
இப்போது நாடு முழுவதும் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 75 லட்சத்தைக் கடந்துள்ளது. கரோனா பாதிப்பு முடிவுக்கு வரும்போது இது 1.05 கோடியாக உயர வாய்ப்பு உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும்.
கரோனா பரவல் குறைவாக இருந்தபோதே மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச்25-ம் தேதி நாடு தழுவியபொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு முன்கூட்டியேபொது முடக்கம் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் கரோனாபாதிப்பு மோசமாக இருந்திருக்கும்.
25 லட்சம் தாண்டியிருக்கும்
இதனால் கடந்த ஆகஸ்ட் மாதவாக்கில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தைத் தாண்டியிருக்கும். ஆனால்இப்போது வரை 1.14 லட்சம் பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அதேநேரம், இனிமேல்பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.