இந்தியாவில் கரோனா தொற்று 73 லட்சத்தைக் கடந்தது: குணமடைந்தோர் 64 லட்சத்தை நெருங்குகின்றனர்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம்,குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்குகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 67 ஆயிரத்து 708 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 73 லட்சத்து 7 ஆயிரத்து 97 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63 லட்சத்து ஆயிரத்து 83 ஆயிரத்து 441 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 87.35 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 8 லட்சத்து 12 ஆயிரத்து 390 ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11.11 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தொடர்ந்து 7-வது நாளாக கரோனா வைரஸால் சிகிச்சை பெற்றுவோர் எண்ணிக்கை 9 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸால் 680 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 226 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் உயிரிழப்பு 1.52 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 9 கோடியே 12 லட்சத்து 26 ஆயிரத்து 306 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11 லட்சத்து 36 ஆயிரத்து 183மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கரோனா பாதிப்பு 20 லட்சத்தை எட்டிய நிலையில், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும், 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும் எட்டியது. அக்டோபர் 10-ம் தேதி 70 லட்சத்தையும் எட்டியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in