சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை விதித்தது மகாராஷ்டிர அரசு

சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை விதித்தது மகாராஷ்டிர அரசு
Updated on
1 min read

மகாராஷ்டிர அரசின் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிக்கை:

சிகரெட் மற்றும் இதர புகையிலை தயாரிப்புகள் (தடுப்பு) சட்டத்தின் 7(2)-வது பிரிவின் கீழ் சிகரெட் மற்றும் பீடிகளை சில்லறையாக விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. புகைப் பழக்கத்தால் புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய் ஏற்படுகிறது. எனவே, இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிகரெட், பீடி பாக்கெட்களில், புகைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகளை சித்தரிக்கும் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

ஆனால், சில்லறையாக விற்பனை செய்தால் புகை பிடிப்பவருக்கு இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாமல் போய்விடும்.எனவேதான் சில்லறை விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் சிகரெட், பீடி சில்லறை விற்பனைக்கு தடை விதித்த முதல் மாநிலம் என்ற பெருமை மகாராஷ்டிராவுக்கு கிடைத்துள்ளது.

இதுகுறித்து டாடா நினைவு மருத்துவமனை புற்றுநோய் மருத்துவர் டாக்டர் பங்கஜ் சதுர்வேதி கூறும்போது, “முழு பாக்கெட்டாக மட்டுமே வாங்க முடியும் என்ற மகாராஷ்டிர அரசின் இந்த முடிவால் சிறு வயதினர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாவதைத் தடுக்க முடியும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in