அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சுட்டுக் கொலை

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் சுட்டுக் கொலை
Updated on
1 min read

உபியின் அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் மாணவர் அதன் வளாகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனால், அங்கு நிலவும் பதட்டத்தை தணிக்க இன்று (சனிக்கிழமை) அனைத்து வகுப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டதாக நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உபியின் சஹரான்பூரை சேர்ந்த வயது மாணவர் ஆலம்கீர். இவர் அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தில் இறுதி ஆண்டு பி.ஏ பட்டப்படிப்பு பயின்று வருகிறார். பல்கலையின் விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று மாலை 4.00 மணி சுமாருக்கு வளாகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது, எங்கிருந்தோ திடீர் என இருசக்கர வாகனங்களில் வந்த நால்வர் தம்மிடம் இருந்த துப்பாக்கிகளால் மீது சராமரியாக சுட்டுத் தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால், ஐந்து இடங்களில் குண்டு பட்ட மாணவர் அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்து விட்டார். அவரை வளாகத்தில் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து அலிகரின் சிவில் லைன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.

வளாகத்தின் அனைத்து கல்வி வகுப்புகளும் இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆலம்கீர் சுட்டுக் கொல்லப்பட்டதால் பல்கலைகழக மாணவர்களால் கோபத்தில் எதுவும் அசாம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க, வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 37,000 மாணவர்கள் கல்வி பயிலும் மிகவும் பழமையான இது ஒரு மத்திய பல்கலைகழகம் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in