கருப்புப் பணத்தை நரேந்திர மோடி மீட்பார்: ராம்தேவ் நம்பிக்கை

கருப்புப் பணத்தை நரேந்திர மோடி மீட்பார்: ராம்தேவ் நம்பிக்கை
Updated on
1 min read

அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி நேர்மறையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று பாபா ராம்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜைசால்மரில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு யோகா பயிற்சி கற்றுக் கொடுக்க வந்துள்ள பாபா ராம்தேவ் கூறும்போது, “கருப்புப் பண விவகாரம் என்னால் எழுப்பப் பட்டது. நிச்சயம் கருப்புப் பணத்தை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார்.

மனிதர்களுக்கு யோகா நல்ல காலத்தை உருவாக்கி, ஆரோக்கியத்தை அளிக்கும், ஆனால் நாட்டுக்கு நல்ல காலம் எப்போது பிறக்கும் என்பது பிரதமர் அல்லது கடவுளுக்கே வெளிச்சம்” என்றார் பாபா ராம்தேவ்.

பிஹார் தேர்தல்கள் பற்றிய கேள்விக்கு, “மத்திய அரசும், முதல்வர் நிதிஷ் குமாரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் பிரிவினருக்கு செய்த நல்லது பற்றி மக்களிடம் எடுத்து வைக்க வேண்டும், இதன் மூலம் மக்கள் முடிவெடுப்பார்கள்” என்றார்.

நிலம் கையகப்படுத்தும் மசோதா மற்றும் சரக்கு, சேவைவரி மசோதாக்களை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார் பாபா ராம்தேவ்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in