

இமாச்சல பிரதேசம் கல்கா - ஷிம்லா வழித்தடத்தில் மலை ரயில் தடம் புரண்டதில் இரு வெளிநாட்டினர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். மீட்புப் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
வெளிநாட்டினர் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. யார் என்பதை தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இன்று அதிகாலை ஆந்திர மாநிலம் செகந்தராபாத்தில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் கர்நாடகாவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 2 பயணிகள் பலியாகினர்.
இச்செய்தியை முழுமையாகப் படிக்க: >கர்நாடகாவில் துரந்தோ ரயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி; காயம் 7