பாகிஸ்தானில் குருத்துவாராவை மசூதியாக மாற்ற முயற்சி : பஞ்சாப் முதல்வர் கண்டனம்

பாகிஸ்தானில் குருத்துவாராவை மசூதியாக மாற்ற முயற்சி : பஞ்சாப் முதல்வர் கண்டனம்
Updated on
1 min read

பாகிஸ்தான் லாகூரில் உள்ள சீக்கியர்கள் வழிபாட்டுத் தலமான குருத்துவாராவை மசூதியாக மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளுக்கு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“லாகூரில் உள்ள ஷாகிதி ஆஸ்தான் புனித குருத்துவாராவை மசூதியாக மாற்றும் முயற்சிகளுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இது பாய் தாரு சிங் தியாகத்தின் நினைவுச் சின்னமாகும்.

வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் இது தொடர்பாக சீக்கியர்களின் கவலைகளை பாகிஸ்தானுக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்” என்றார்.

1745-ல் பாய் தாரு சிங் உயரிய தியாகத்தைச் செய்த இடமாகும் அது.

மத்திய அரசும் பாகிஸ்தான் தூதரகத்தில் இது தொடர்பாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in