கரோனா தொற்று; முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் நோயாளிகள் குணமடைந்தனர்  

கரோனா தொற்று; முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் நோயாளிகள் குணமடைந்தனர்  
Updated on
1 min read

கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் கோவிட் தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளனர்; 28,472 நோயாளிகள் வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில்தான், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில், 28,472 கோவிட்-19 தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 7,53,049 ஆக உள்ளது. இதனால் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடையும் விகிதம் 63.13 சதவீதமாக அதிகரித்துள்ளது.

குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரி்த்து வருகிறது. சிகிச்சை பெறுபவர்களை விட, 3,41,916 பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4,11,133 என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய அளவில் குணமடையும் விகிதத்தை விட 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் குணமடையும் விகிதம் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in