

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தெலங்கானா, தமிழகத்தில்10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால், ஆந்திராவில் கண்டிப்பாக 10-ம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என்று கல்விஅமைச்சர் ஆதிமூலபு சுரேஷ்கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சியினரும், பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை கல்வித்துறை அமைச்சர் ஆதிமுலபு சுரேஷ் அமராவதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கரோனா பரவலால் மாணவ, மாணவியரின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது. இதனால் 6.3 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுகின்றனர்.
இவர்களின் வருகைப் பதிவேடு மற்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை ஆய்வு செய்துவிரைவில் இவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான கிரேடுகள் அறிவிக்கப்படும்' என்றார்.