தொழிலாளர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது மாநிலங்களின் பொறுப்பு: நிதி ஆயோக் சி.இ.ஓ. அமிதாப் கந்த்

தொழிலாளர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது மாநிலங்களின் பொறுப்பு: நிதி ஆயோக் சி.இ.ஓ. அமிதாப் கந்த்
Updated on
1 min read

கரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக வெளிமாநிலங்களுக்குச் சென்று பிழைக்கும் தொழிலாளர்களின் நிலை கொடுமையாக மாறியுள்ளது, இவர்கள் விஷயத்தில் நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம், செயல்பட்டிருக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் கந்த் தெரிவித்துள்ளார்.

லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் கால்நடையாக, சைக்கிளில் பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் நடைபயணமாக சொந்த ஊர் புறப்பட்டனர், பலர் வழியிலேயே மரணமடைந்தனர்.

இந்நிலையில் என்.டி.டிவியில் அமிதாப் கந்த் இது தொடர்பாகக் கூறும்போது, “புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை பெரிய சவால் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் உருவாக்கியச் சட்டங்களினால் பொருளாதாரத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் பெரிய அளவில் உருவாகினர்.

தொழிலாளர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது மாநிலங்களின் பொறுப்பு. இந்தியா போன்ற பெரிய நாடுகளில் மத்திய ஆட்சிக்கு இதில் உள்ள பங்கு வரம்புக்குட்பட்டதுதான். இந்தச் சவாலில் நாம் இன்னும் கொஞ்சம் நன்றாகச் செயல்பட்டிருக்கலாம். ஒவ்வொரு தொழிலாளரையும் நன்றாக வைத்திருப்பதில் மாநில, மாவட்ட மட்டத்தில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் என்றே தோன்றுகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in