கரோனா தடுப்பு நடவடிக்கை; மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஹர்ஷ வர்த்தன் ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கை; மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஹர்ஷ வர்த்தன் ஆலோசனை
Updated on
1 min read

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் மற்றும் இணையமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோர் இன்று காணொலிக் காட்சி மூலம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் மற்றும் இணையமைச்சர் அஸ்வினி சவுபே ஆகியோர் இன்று காணொலிக் காட்சி மூலம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் மாநிலங்கள் வாரியாக கரோானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in