

பணத்துக்காக சிறுவனைக் கடத்தி கொலை செய்த வழக்கில் 2 குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய கடுமையான தண்டனை அவசியம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு, மர்ம நபர்கள் பணத்துக்காக பள்ளி மாணவன் அபய் வர்மாவை கடத்தி கொலை செய்தனர். இதுதொடர்பான வழக் கில் விக்ரம் சிங் மற்றும் ஜஸ்பிர் சிங் ஆகிய இருவருக்கும் செஷன்ஸ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை பஞ்சாப் உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதையடுத்து உச்ச நீதிமன்றத் தில் குற்றவாளிகள் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்திய தண்டனை சட்டம் 364ஏ-வின் கீழ் தண்டனை வழங்கியதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரி இருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதி பதிகள் டி.எஸ்.தாகுர், ஆர்.கே.அகர்வால் மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங் கிய அமர்வு, மரண தண்டனையை உறுதி செய்து வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் 2 குற்றவாளிக ளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய் கிறோம். இது ஒன்றும் கொடூரமான தண்டனை அல்ல. பணத்துக்காக ஆட்களை கடத்துவது அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய கடுமையான தண்டனை தேவைப் படுகிறது. ஆட்களை கடத்தி கொலை செய்யும் செயலில் ஈடு படும் தீவிரவாதிகளுக்கு எதிராக 364ஏ பிரிவு சேர்க்கப்பட்டாலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கும் இது பொருந் தும்” என்றனர்.