ஹரித்வாரில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை

ஹரித்வாரில் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த தடை: தேசிய பசுமை தீர்ப்பாயம் நடவடிக்கை
Updated on
1 min read

உத்தராகண்டின் ஹரித்வாரில் கங்கை நதியிலும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) தடை விதித்துள்ளது.

இதுகுறித்து உத்தராகண்ட் மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹரித்வாருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தாங்கள் கொண்டுவரும் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசிவிட்டுச் செல்கின்றனர். இந்த பாட்டில்கள் கங்கை நதிப்படுகையில் தேங்குவதால் மாசடைந்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக ஹரித்வாரில் பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது.

இந்தத் தடை உத்தரவை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று என்ஜிடி மாநில அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. கங்கை நதியைச் சுற்றியுள்ள பகுதியில் பிளாஸ்டி பாட்டில் விற்பனை செய்யும் கடைகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்ஜிடி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ஒரு அதிகாரியை நியமித்துள்ள என்ஜிடி, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவரை கேட்டுக்கொண்டுள்ளது. அந்த அதிகாரிக்கு தேவையான ஒத்து ழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட் டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in