Published : 08 Feb 2020 06:51 PM
Last Updated : 08 Feb 2020 06:51 PM

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி: தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக்கணிப்பில் தகவல்

டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மியே ஆட்சியை கைப்பற்றும் எனத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பெரும் பரபரப்படன் எதிர்பார்க்கப்பட்ட டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப்பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி பிரச்சாரம் செய்தார்.
அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளாகப் பிறகு இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டது.

அதேபோல காங்கிரஸ் கட்சியும், 2014-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்து வருகிறது.

டெல்லி தேர்தலில் பதிவான வாக்குகள் 11-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்தசூழலில் டெல்லி தேர்தலில் வாக்களித்த வாக்களர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

இதில் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மியே ஆட்சியை கைப்பற்றும் எனத் தெரிவிக்கின்றன.

நியூஸ் எக்ஸ் நேத்தா:

ஆம் ஆத்மி 53- 57
பாஜக 11- 17
காங்கிரஸ் 0-2
மற்றவை- 0

ரிபப்ளிக் டிவி

ஆம் ஆத்மி 48- 61
பாஜக 19- 21
காங்கிரஸ் 0-1
மற்றவை- 0

டைம்ஸ் நவ்

ஆம் ஆத்மி 44
பாஜக 26
காங்கிரஸ் 0
மற்றவை- 0

இவ்வாறு தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தவறவிடாதீர்

இப்போதைக்கு கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை: முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x