டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: ஏற்பாடுகள் தயார்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுஅளவில் செய்துள்ளது.

டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நாளை 8-ம் தேதி தேர்தலும், 11-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. 2-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தீவிரமாகப் பிரச்சாரம் செய்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக மக்களுக்குச் செய்த நலத்திட்டப்பணிகள், திட்டங்கள் போன்றவற்றைக் கூறி பிரச்சாரம் செய்தார்.

அதேசமயம், 1998-ம் ஆண்டுக்குப் பின் பாஜகவால் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. ஏறக்குறைய 22 ஆண்டுகளாகப் பிறகு இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியும், 2014-ம் ஆண்டுக்குப் பின் டெல்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வருகிறது.

இதனால் இந்த முறை காங்கிரஸ், பாஜக, ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி இருந்தாலும், பாஜக, ஆம் ஆத்மி இடையேதான் தீவிரமான போட்டி இருந்து வருகிறது. ஆனால், தேர்தலுக்கு முந்தைய பல கணிப்புகள் வெளிவந்துள்ள நிலையில், பெரும்பாலானவை மீண்டும் ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.

இந்தநிலையில் நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு அளவில் செய்துள்ளது. இந்த தேர்தலில் ஒரு கோடியே 47 லட்சத்து 86 ஆயிரத்து 382 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிய வாக்காளர்கள் ஆவர்.

மொத்தம் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 190 கம்பெனிகள் மத்திய ரிசர்வ் படை போலீஸார், டெல்லி போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அதில் கியூஆர்கோடு உள்ளிட்டவை இணைக்கபட்டுள்ளதால் பாதுகாப்பானவை என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in