அறக்கட்டளையில் தன்னை சேர்க்கவில்லை: ராமஜென்ம பூமி நியாஸ் தலைவர் கடும் ஏமாற்றம்

மஹந்த் நிருத்ய கோபால் தாஸ். | கோப்புப் படம்.
மஹந்த் நிருத்ய கோபால் தாஸ். | கோப்புப் படம்.
Updated on
1 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளையில் தன் பெயரைச் சேர்க்காததால் கடும் ஏமாற்றமடைந்துள்ளதாக ராமஜென்ம பூமி நியாஸ் அமைப்பின் தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் தெரிவித்திருப்பதால், பாஜக அவரை சமாதானம் செய்ய 3 தலைவர்களை அனுப்பியுள்ளது.

எம்.எல்.ஏ. வேதப்பிரகாஷ் குப்தா, மேயர் ரிஷிகேஷ் உபாத்யாய் மற்றும் அயோத்தியா மகாநகர் தலைவர் அபிஷேக் மிஸ்ரா, ஆகியோர் நிருத்ய கோபாலைச் சந்திக்க மணிதாச் கோயிலுக்கு விரைந்தனர்.

ஆனால் இவர்களை கோயிலுக்குள் அங்குள்ள சன்னியாசிகள் அனுமதிக்கவில்லை இதனால் இவர்கள் திரும்ப நேரிட்டது. உடனேயே மஹந்த் நிருத்ய கோபால் 3 மணிக்கு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். , 5 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஆனால் இந்த 2 நிகழ்வுகளும் நடக்கவில்லை, காரணம் மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து மணிதாஸ் கோயில் நிர்வாகிகளுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக நிருத்ய கோபால் தாஸுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் மஹந்த் கமல் நயன் தாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ. குப்தா கூறுகையில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மஹந்த்திற்கும் இடையே தொலைபேசி உரையாடலை ஏற்பாடு செய்தேன். ராமர் கோயில் அறக்கட்டளையில் இன்னும் 3 பதவிகள் காலியாகத்தான் உள்ளன், அதில் மஹந்த் நிருத்ய கோபால் தாஸுக்கு நிச்சயம் இடமுண்டு” என்றார்.

இதனையடுத்து மஹந்த் சமாதானம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.

முன்னதாக மஹந்த், கோயிலுக்காக உயிரைக் கொடுத்துப் போராடியவர்கள் பெயர் புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார்.

கமல் நயன் தாஸ் கூறும்போது, வைஷ்ணவ் சமாஜ் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது, இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

இதற்கிடையே ராமர் கோயில் அறக்கட்டளைத் தலைவராக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோஹன் பாகவத்தை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த மஹந்த் பரம்ஹஸ் தாஸ் சந்தவ்லியில் உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

முன்னதாக, இந்த அறக்கட்டளைக்கு ஒரு தலித் உறுப்பினர் உள்பட 15 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் சொலிசிட்டரான கே.பராசரன், ஜகத்குரு சங்கராச்சார்யா, ஜோதிஸ்பீதாதீஸ்வர் சுவாமி வாசுதேவானந்த் சரஸ்வதிஜி மகராஜ் (அலகாபாத்), ஜகத்குரு மாதவாச்சார்யா சுவாமி விஸ்வா பிரசன்னதீர்த் ஜி மகராஜ் , உடுப்பி பெஜாவர் மடம், ஹரித்வாரின் யுகபுருஷ் பரமானாந்த் ஜி மகராஜ், புனேவைச் சேர்ந்த சுவாமி கோவிந்த கிரி ஜி மகராஜ் , அயோத்தியைச் சேர்ந்த விமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா, ஹோமியோபதி மருத்துவர் அனில் மிஸ்ரா, பாட்னாவைச் சேர்ந்த கமாஸ்ஸவர் சவுபால், நிரமோகி அஹாராவின் மகந்த் தினேந்திர தாஸ், அயோத்தி பைதக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in