செலவு கணக்கு தாக்கல் செய்யாத 529 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

இந்திய தேர்தல் ஆணையம்

இந்திய தேர்தல் ஆணையம்

Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த மக்​களவை மற்​றும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களில் போட்​டி​யிட்​டு, நிர்​ண​யிக்​கப்​பட்ட காலத்​திற்​குள் தேர்​தல் செல​வுக் கணக்​கு​களைத் தாக்​கல் செய்​யத் தவறிய 529 வேட்​பாளர்​களைத் தகுதி நீக்​கம் செய்து தேர்​தல் ஆணை​யம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இதையடுத்​து, இவர்​கள் அடுத்த மூன்று ஆண்​டு​களுக்கு நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வைத் தேர்​தல்​களில் வாக்​களிக்​கவோ, போட்​டி​யிடவோ முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

1951-ம் ஆண்டு மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டத்​தின் பிரிவு 10ஏ-ன் கீழ் செலவு கணக்​கு​களை முறைப்​படி தாக்​கல் செய்​யாத 529 வேட்​பாளர்​கள் மீது தகுதி நீக்க நடவடிக்​கையை தேர்​தல் ஆணை​யம் எடுத்​துள்​ளது. கடந்த மார்ச் 16-ம் தேதி பிறப்​பிக்​கப்​பட்ட இந்த உத்​தர​வின்​படி, மேற்கு வங்​கத்​தைச் சேர்ந்த 4 பேர் உட்பட நாடு முழு​வதும் உள்ள 529 சுயேச்சை வேட்​பாளர்​கள் தங்​களது அடிப்​படைத் தேர்​தல் உரிமை​களை இழக்​கின்​றனர்.

சட்ட விதி​களின்​படி, தேர்​தலில் போட்​டி​யிடும் ஒவ்​வொரு வேட்​பாள​ரும் தேர்​தல் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்ட 30 நாட்​களுக்​குள் தங்​களது முழு​மை​யான தேர்​தல் செல​வுக் கணக்​கைத் தாக்​கல் செய்​வது கட்​டாய​மாகும். அப்​படி சமர்ப்​பிக்க தவறு​வோரை மூன்று ஆண்​டு​களுக்​குத் தகுதி நீக்​கம் செய்​யத் தேர்​தல் ஆணை​யத்​திற்கு அதி​காரம் உள்​ளது.

இந்​தத் தகுதி நீக்​க​மானது இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யத்​தால் நடத்​தப்​படும் தேர்​தல்​களுக்கு மட்​டுமே பொருந்​தும். அதே​நேரம், மாநிலத் தேர்​தல் ஆணை​யங்​களால் நடத்​தப்​படும் உள்ளாட்சி தேர்​தல்​களுக்கு இது பொருந்​தாது. அதி​கபட்​ச​மாக உ.பி.யில் 120, கர்​நாடகா 59, மத்​திய பிரதேசம் 39, சத்​தீஸ்​கர் 36, தமிழ்​நாடு 33, பிஹார் 28, தெலங்​கா​னா, பஞ்​சாப், உத்​த​ராகண்ட் தலா 27, ஆந்​திரா 25, கேரளா 16 உள்​ளிட்ட மாநிலங்​களின் 529 வேட்​பாளர்​கள் தகுதி நீக்​கப் பட்​டியலில்​ இடம்​பெற்​றுள்​ளனர்​.

<div class="paragraphs"><p>இந்திய தேர்தல் ஆணையம்</p></div>
விஜய்யின் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in