Published : 09 Nov 2019 06:39 AM
Last Updated : 09 Nov 2019 06:39 AM

சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்?- அயோத்தி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு

புதுடெல்லி

அயோத்தி ராமஜென்ம பூமி வழக் கில் இன்று காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கு கிறது. இதையொட்டி உத்தரபிர தேசம் உட்பட நாடு முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாடா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கடந்த 2010 செப்டம்பர் 30-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.அப்துல் நசீர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் அயோத்தி வழக்கில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு இருதரப்பு வாதங்கள் கடந்த மாதம் 16-ம் தேதி நிறை வடைந்தன. முன்னதாக அயோத்தி ராமஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரத்தில் சுமுகத் தீர்வு காண நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட சமரசக் குழு கடந்த மாதம் 16-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கையை தாக்கல் செய்தது.

இன்று தீர்ப்பு

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக தீர்ப்பு வெளி யாகும் என்று எதிர்பார்க்கப்பட் டது. இந்நிலையில் அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த தீர்ப்பையொட்டி உத்தர பிரதேசம் உட்பட நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட அயோத்தி யில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாப்பை பலப்படுத்தக் கோரி அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார் பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள் ளது. அதில், பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.

இதனிடையே அயோத்தி உட் பட உத்தரபிரதேசத்தில் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பணிகளுக் காக துணை ராணுவப்படை வீரர் கள் 4 ஆயிரம் பேரை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்துள் ளது. அயோத்தி நகரில் மட்டும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள் ளதாகத் தெரியவந்துள்ளது.

அயோத்தியில் கூடுதல் படை

இதுகுறித்து உ.பி. மாநில கூடுதல் போலீஸ் டிஜிபி (சட்டம், ஒழுங்கு) பி.வி.ராமசாஸ்திரி கூறும் போது, “அயோத்திக்கு கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்கள் அனுப் பப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லா மல் மாநிலம் முழுவதும் பதற்ற மான பகுதிகளில் கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். எந்த இடத்திலும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழாதவண்ணம் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. அதிக அளவில் போலீஸார், துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட் டுள்ளனர். மேலும் கடந்த 2 மாதங் களுக்கு போதிய கருவிகளும், பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளன. கண்காணிப்புப் பணிக்காக ஆளில் லாத விமானங்கள் ஈடுபடுத்தப் படும். இதை பாதுகாப்புப் பணி யில் இருக்கும் ராணுவ வீரர்கள் செய்வார்கள். பதற்றமான பகுதி கள், முக்கிய கட்டிடங்களின் மேல் பகுதிகளைக் கண்காணிக்கவும் ஆளில்லாத விமானங்கள் பயன் படுத்தப்படும். தீவிரவாத தடுப்புப் படை, வெடிகுண்டு செயலிழிப்புப் படை, தீவிரவாத சதி முறியடிப்புப் படை, அதிரடிப் படையினர் மட்டும் இங்கு பணியில் ஈடுபட்டுள்ளனர். அயோத்தியின் முக்கிய சந்திப்பு, பகுதிகளில் பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீஸார் வாகனங்களில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்” என்றார்.

2 ஹெலிகாப்டர்கள்

கூடுதல் போலீஸ் டிஜிபி ஆசுதோஷ் பாண்டே கூறும்போது, “துணை ராணுவத்தினர் உள்ளிட்ட 60 பாதுகாப்புப் படை வீரர்கள் குழு பாதுகாப்புப் பணியில் ஈடுபட் டுள்ளது. மேலும் 10 ஆளில்லாத விமானங்கள் கண்காணிப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 30 முக் கிய சந்திப்புகளில் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அயோத்தி நகரம் முழுவதும் 31 பிரிவுகளாகவும், 35 உப பிரிவு களாகவும் பிரிக்கப்பட்டு பாது காப்புப் படையினரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது. அதே நேரத்தில் அயோத்தி நகருக்குள் பக்தர்கள் வர எந்தத் தடையும் விதிக்கப்பட வில்லை. பாதுகாப்புப் பணியில் 2 ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப் படும்" என்றார்.

தலைமை நீதிபதி ஆலோசனை

இதனிடையே உ.பி. தலைமைச் செயலர் ராஜேந்திர குமார் திவாரி, போலீஸ் டிஜிபி பிரகாஷ் சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் சந்தித்து பாது காப்பு ஏற்பாடுகள் குறித்து தெரிவித் தனர். அயோத்தி நகரின் பாது காப்பு நடவடிக்கைகள், கண் காணிப்பு நடவடிக்கைகள் குறித் தும் தலைமை நீதிபதியிடம் அவர்கள் விளக்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x