பத்ம விருதுகளுக்கு லலித் மோடி பெயர் பரிந்துரை: ராஜஸ்தான் காங்கிரஸ் சாடல்

பத்ம விருதுகளுக்கு லலித் மோடி பெயர் பரிந்துரை: ராஜஸ்தான் காங்கிரஸ் சாடல்
Updated on
1 min read

ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் முந்தைய ஆட்சி காலத்தில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி பெயர் பத்மவிருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டது என்று ராஜஸ்தான் காங்கிரஸ் ஊடகச் செய்தி ஒன்றின் அடிப்படையில் கூறியுள்ளது.

இதனையடுத்து ராஜஸ்தான் பிரதேஷ் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறும்போது, “2007-ம் ஆண்டு ராஜே தலைமையிலான ஆட்சியின் போது லலித் மோடியின் பெயர் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது சமீபத்திய தகவல். லலித் மோடிக்கும் ராஜேவுக்குமான நட்புறவை இது மேலும் உறுதிபடுத்துகிறது.

முந்தைய பாஜக ஆட்சியில் ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டது. இதில் லலித் மோடிக்கு பெரும்பங்கு உண்டு. ராஜஸ்தான் அரசின் செயல்பாடுகளில் லலித் மோடியின் தலையீடு அப்போது இருந்தது.

ஆனால், மையத் தலைமை ராஜே மீது எந்தவித நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளவில்லை.” என்று சாடியுள்ளார்.

ராஜஸ்தான் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் செயலராக அப்போது பதவி வகித்தவர் யு.டி.கான். இவர்தான் லலித் மோடியின் பெயரை பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அதாவது 2007-ம் ஆண்டு கிரிக்கெட்டுக்கு லலித் மோடி செய்த வர்த்தகப் பங்களிப்புக்காக பத்ம விருதுகளுக்கு அவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பிடிஐ கானைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அப்போதைய கோப்புகளை பார்த்த பிறகே இது பற்றி கருத்து கூற முடியும்” என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in