

புதுடெல்லி
நாடுமுழுவதும் உள்ள கால்நடைகள் எண்ணிக்கை குறித்து தற்போது எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் பல்வேறு மாநிலங்களில் நாட்டு மாடு இனங்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வெளிநாட்டு மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டு கலப்பின மாடுகள் உருவாக்கப்பட்டன. ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த வெண்மை புரட்சியின் கீழ் புதிய கலப்பின மாட்டு இனங்கள் உருவாக்கப்பட்டன.
பாலுக்கு இருந்த தேவையாலும் அதிக பால் கிடைக்கும் என்ற எண்ணத்தாலும் நாட்டு மாடுகள் படிப்படியாக ஓங்கப்பட்டப்பட்டன. கலப்பின மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து, நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
(தகவல்: கால்நடை கணக்கெடுப்பு- மத்திய கால்டை வளர்ப்புத்துறை)
இந்த நிலையில் கால்நடை கணக்கெடுப்பு 2019 முடிந்த அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பின்படி நாடுமுழுவதும் மொத்த மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டில் 19கோடியாக இருந்த மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டுகளில் 19.24 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை உயர்வுக்கு கலப்பின மாடுகளின் எண்ணிக்கையே கணிசமாக உயர்ந்து வருவதால் மொத்தமாக மாடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
2012-ம் ஆண்டில் 3.9 கோடியாக இருந்த கலப்பின மாடுகளின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 5.04 கோடியாக அதிகரித்துள்ளது.
அதேசமயம் இந்தியாவின் தனிப்பட்ட நாட்டு மாடுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
கடந்த, 2012ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, நாட்டு மாடுகளின் எண்ணிக்கை, 16 கோடியாக இருந்தது; அது தற்போது, 13.98 கோடியாக குறைந்துள்ளது. குறிப்பாக காளை இனங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.