கல்கி ஆசிரமத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை: ரூ.33 கோடிக்கு ஆவணங்கள் சிக்கின

கல்கி ஆசிரமத்தில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை: ரூ.33 கோடிக்கு ஆவணங்கள் சிக்கின
Updated on
1 min read

என்.மகேஷ்குமார்

திருப்பதி

சென்னையை சேர்ந்த விஜய குமார் (70) தன்னை விஷ்ணுவின் 10-வது அவதாரமான கல்கி பகவான் எனக் கூறிக் கொண்டார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜுபேட் டையில் ஆசிரமம் தொடங்கினார். பின்னர் பல இடங்களில் கிளை ஆசிரமங்களை தொடங்கினார். ஸ்ரீ காளஹஸ்தி அருகே உள்ள வரதய்ய பாளையம் எனும் இடத்தில் 26 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரம்மாண்டமான ஆஸ்சிர மத்தை விஜயகுமார் நிறுவினார்.

இந்த ஆசிரமங்களுக்காக அரசு நிலங்களை ஆக்கிரமித்ததாகவும், ஆசிரமத்திற்கு வழங்கப்பட்ட நிலங்களை ரியல் எஸ்டேட் மூலம் விற்பனை செய்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இதன்பேரில், நேற்று முன்தினம் கல்கி ஆசிரமம் உட்பட அதற்கு சொந்தமான 40 இடங்களில் ஒரே சமயத்தில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், 2-ம் நாளாக நேற்று பல கல்கி ஆசிரமங்களில் சோதனை தொடர்ந்தது. இதில் ஆப்பிரிக்காவில் ஆசிரமத்திற்கு சொந்தமான ரூ. 20 கோடி மதிப்பி லான அக்கிரம சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், ரூ 33 கோடி மதிப்பிலான ஆவணங்களும் பறிமுதல் செய் யப்பட்டன.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கல்கி ஆசிரம அலுவலகம், பூந்தமல்லி அருகே நேமத்தில் உள்ள ஆசிரமம் உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரொக் கப்பணம் பறிமுதல் செய்யப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in