குஜராத், மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகாவிலும் வாகனச்சட்ட அபராதம் குறைப்பு: முதல்வர் எடியூரப்பா தகவல்

குஜராத், மகாராஷ்டிராவை தொடர்ந்து கர்நாடகாவிலும் வாகனச்சட்ட அபராதம் குறைப்பு: முதல்வர் எடியூரப்பா தகவல்
Updated on
1 min read

இரா.வினோத்

பெங்களூரு

குஜராத், மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் போக்குவரத்து விதிமுறை மீறலுக்கான அபராதத் தொகை குறைக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த 1-ம் தேதி புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது. அதன்படி போக்குவரத்து விதிகளை மீறுவோரிடம் வசூலிக் கப்படும் அபராதத் தொகை பன் மடங்கு உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வ லர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ள நிலையில், போலீஸார் வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதால் கோபத்தில் தனது வாகனத்தை தீ வைத்து கொளுத்தினார்.

ஒடிஸாவில் லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டது. ராஜஸ்தானில் லாரி ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் லாரி ஓட்டுநர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, “உயர்த்தப்பட்டுள்ள அப ராதத் தொகையை மாநில அரசு கள் தேவைப்பட்டால் குறைத்துக் கொள்ளலாம்'' என விளக்கம் அளித்தார்.

இதையடுத்து புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி விதிக்கப் பட்ட அபராதத் தொகையை குறைப்பதாக குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதே பாணியில் கர்நாடகாவிலும் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்தது.

இதன்படி முதல்வர் எடியூரப்பா நேற்று கர்நாடக அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளு டன் ஆலோசனை நடத்தினார். அப் போது உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை குறைப்பது, வசூலிக் கும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவது குறித்தும் ஆலோ சனை நடத்தினார்.

இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், ‘‘குஜராத், மகாராஷ் டிரா மாநிலங்களைப் போல கர்நாட காவிலும் புதிய வாகனச் சட்டத்தின் படி விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறைக்கப்படும். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்தப்பின் முறை யான அரசாணை வெளியிடப்படும்'' என்றார்.

இதனிடையே துணை முதல்வர் கோவிந்த் கர்ஜோள் கூறுகையில், “அதிக விபத்துகள் ஏற்படுவதால் தான் அபராதத் தொகை உயர்த்தப் பட்டு இருப்பதாக கூறுவதை என்னால் ஏற்க முடியாது. தரமான சாலைகளில்தான் வாகனங்கள் மிக வேகமாக செல்கின்றன.பெரும் பாலான விபத்துகள் தேசிய நெடுஞ் சாலைகளில் நடக்கின்றன. கர் நாடகாவில் அபராத தொகையை குறைக்க முடிவெடுக்கப்பட்டுள் ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in