விளையாட்டு வீரர்களைப் போல இஸ்ரோவும் சாம்பியனே: பிரதமர் மோடி 

விளையாட்டு வீரர்களைப் போல இஸ்ரோவும் சாம்பியனே: பிரதமர் மோடி 
Updated on
1 min read

புதுடெல்லி,

இஸ்ரோவையும் விளையாட்டு வீரர்களையும் ஒப்பிட்டு பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

முன்னதாக, இஸ்ரோவின் சந்திரயான் 2 முயற்சியைப் பாராட்டி விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.

அந்த வரிசையில் டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி தனது ட்விட்டரில், வாழ்த்துகள் இஸ்ரோ. இது உங்களை இன்னும் வேகமாக செயல்பட உந்தும். உங்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது. ஜெய் ஹிந்த்" எனப் பதிவிட்டிருந்தார்.

மகேஷ் பூபதியின் ட்வீட்டை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி, "இஸ்ரோவும், இந்திய விளையாட்டு வீரர்களும் சாம்பியன்கள. இவர்களுக்கு தோல்வியே இல்லை. சறுக்கல்கள் எல்லாம் படிப்பினை மட்டுமே" எனப் பதிவிட்டுள்ளார்.

நிலவின் தரை பரப்புக்கு மேல் 2.1 கி.மீ உயரத்தில் இறங்கிக் கொண்டிருந்த விக்ரம் லேண்டருக்கும் தரைக் கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. உலகமே உற்று நோக்கிய விண்வெளி சாதனைப் பயணத்தில் சிறு சறுக்கல் ஏற்பட்டது.

- ஏஎன்ஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in