மும்பையில் கனமழை:  பள்ளிகள் விடுமுறை, மின்சாரம் துண்டிப்பு

மும்பையில் கனமழை:  பள்ளிகள் விடுமுறை, மின்சாரம் துண்டிப்பு
Updated on
1 min read

மும்பையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நகரில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் மற்றும் மின்சாரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி, “கனமழை பொழியும் என்று மும்பை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நகரின் பல பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்களுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. சாலையில் தேங்கியுள்ள நீரை வெளியேற்று பணி நடந்து வருகிறது”என்று தெரிவித்துள்ளது.

மழைக் காரணமாக ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் ரயில்கள் வருவதும் தாமதமாகியுள்ளது. மேலும் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 103 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வடமாநிலங்களில் திவிரமாகி வருவதைத் தொடர்ந்து அங்கு கடுமையான மழை பெய்து வருகிறது.

ஜூலை மாதத்திலும் மும்பையில் கனமழை பெய்தது இதன் காரணமாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in