Published : 25 Aug 2019 04:57 PM
Last Updated : 25 Aug 2019 04:57 PM

ஸ்ரீநகர் தலைமைச் செயலகத்தில் காஷ்மீர் கொடி அகற்றம்: இனி தேசியக்கொடி மட்டுமே

ஸ்ரீநகர்
ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்பு மூவர்ணக் கொடியுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலக் கொடியும் பறந்து வந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர் கொடி அகற்றப்பட்டு, தேசியக் கொடி மட்டுமே பறக்கவிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 1952-ம் ஆண்டு ஷேக் அப்துல்லா மற்றும் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு இடையே நடைபெற்ற ஒப்பந்தபடி இந்திய அரசின் கொடியை தவிர்த்து அந்த மாநிலத்திற்கு என சொந்தக் கொடி இருக்கவும் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

(முந்தைய படம்)

காஷ்மீரின் சிகப்பு கொடியில் ஒரு கலப்பையும், மூன்று கோடுகளும் இடம் பெற்றது.இந்தநிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அரசியலமைப்பு பிரிவு 370 பிரிவையும் திரும்பப் பெற்றது.

மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவித்தது மத்திய அரசு.இதன் மூலம் ஜம்மு காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்து முழுமையாக நீக்கப்பட்டது. அதன்படி தனிக்கொடியும் நீக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் முன்பு மூவர்ணக் கொடியுடன் ஜம்மு காஷ்மீர் கொடியும் பறந்து வந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர் கொடி அகற்றப்பட்டுள்ளது. தேசியக் கொடி மட்டுமே பறக்கவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x