

பசுக்குண்டர்களால் கொலை செய்யப்பட்டதான பேலு கான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரையும் அல்வார் விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததையடுத்து மீண்டும் விசாரணை நடத்த ராஜஸ்தான் அரசு சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்துள்ளது.
முந்தைய விசாரணை எங்கு சறுக்கியது (அப்படி சறுக்கியிருந்தால்) என்பதையும் ஆய்வு செய்யவுள்ளது சிறப்பு விசாரணைக் குழு. நிதின் தீப், டிஐஜி, இந்த சிறப்பு விசாரணைக்குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.
விசாரணையை அனைத்துக் கோணங்களிலும் அணுகவுள்ள சிறப்பு விசாரணைக்குழு, கோர்ட்டில் ஆதாரங்களை, சாட்சியைக் கொண்டு நிறுத்துவதில் அரசு தரப்பு எங்கு தோல்வியடைந்தது, இதற்குப் பொறுப்பு யார் என்பதையும் விசாரணை செய்கிறது.
அதாவது சந்தர்ப, சாட்சியங்களை அழிக்க முயற்சி நடந்ததா அல்லது வழக்கை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்றதா என்ற கோணங்களில் மீண்டும் இந்த விசாரணைக்குழு அலசுகிறது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தீர்ப்பு வெளியான பிறகு வெள்ளிக்கிழமை மாலை மூத்த அதிகாரிகளை அழைத்து மறு விசாரணை குறித்து ஆலோசித்ததாக முதல்வர் அலுவலகம் தெரிவிக்கிறது.