17-வது மக்களவையில் புதிய சாதனை; முதல் கூட்டத்தொடரிலேயே எம்.பி.க்கள் பேச வாய்ப்பு

17-வது மக்களவையில் புதிய சாதனை; முதல் கூட்டத்தொடரிலேயே எம்.பி.க்கள் பேச வாய்ப்பு
Updated on
2 min read

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17-வது மக்களவையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டத்தொடரிலேயே பெரும்பாலான எம்.பி.க்கள் முதல்முறையாக பேச வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் நாடாளுமன்றத்தின் செயல் பாடுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள் ளது. இதுவரை இல்லாத வகையில் 17-வது நாடாளுமன்றக் கூட்டத்தொட ரில் அதிக நேரம் பணிகள் நடை பெற்றுள்ளன. வழக்கமாக மக்களவை யின் வேலை நேரம் காலை 11 மணி முதல் மாலை 6 வரையாகும். ஆனால், முதல் கூட்டத்தொடரிலேயே பல நாட்கள் இரவு வரை மக்களவை நடைபெற்றுள்ளது. இதன் பணி அளவு 128 சதவீதம் எனக் கருதப்படுகிறது. புதிய அவைத் தலைவராக பதவி ஏற்ற ஓம் பிர்லா வின் நோக்கம், புதிதாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களுக்கு முதல்முறையாக பேசும் வாய்ப்பை அளிப்பது ஆகும். இதற்காக அவர் விவாதங்களின் போது மூத்த உறுப்பினர்களுக்கு ஒரு அறிவுரையும் வழங்கினார்.

இது குறித்து அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறும்போது, ‘புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு பேச மூத்த எம்.பிக்கள் விட்டுத்தர வேண்டும். குறிப்பாக கேள்வி நேரங்களில் அமைச்சர்கள் பதிலில் துணைக்கேள்வி கேட்கும் வாய்ப்பை புதியவர்களுக்கு அளிக்க வேண்டும். இதனால், புதியவர்களும் நல்ல அனுபவம் பெற்று மக்களவையில் பேசும் திறனை கொள்வார்கள்’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, பட்ஜெட் தாக்க லுக்கு பின் அதன் மீதான விவாதமும் பதிலுரையும் நிறைவு பெறும் பொருட்டு பூஜ்ஜிய நேரம் இந்த வாரம் முழுவதிலும் ஒதுக்கப்படவில்லை. இதில் தேசிய, மாநில மற்றும் தொகுதி பிரச்சினைகளை அனைத்து கட்சி உறுப்பினர்களும் எழுப்புவது வழக்கம். முக்கியமான நேரமாகக் கருதப்படும் இதில் நாள் ஒன்றுக்கு சுமார் 20 உறுப்பினர்களுக்கு பிரச்சினை எழுப்ப வாய்ப்பளிக்கப்படுகிறது.

இதற்காக அவர்கள் குலுக்கல் முறையிலும், அப்பிரச்சினையின் முக்கியத்துவம் கருதியும் அவைத் தலைவர் வாய்ப்பளிப்பார். ஆனால், இதற்கான வாய்ப்பை குலுக்கல் இல்லாமலே பல உறுப்பினர்களுக்கு பட்ஜெட் மசோதாக்கள் முடிந்த பின் நேற்று முன்தினம் அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் மொத்தம் 162 எம்.பிக்கள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பினர். குறிப்பாக இதுவரை பேசாத புதிய உறுப்பினர்களுக்கு அதிக எண்ணிக்கையில் பேச அவைத் தலைவர் வாய்ப்பளித்தார். இதில், தமிழகத்தின் உறுப்பினர்களும் முதன்முறையாகப் பேசினர்.

காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் மக்களவையில் பேசுகையில், ‘ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் முதல் தொடரிலேயே பேசும் வாய்ப்பை அளிப்பதன் மூலம் மக்களவையில் ஒரு புதிய சகாப்தம் படைக்கிறீர்கள். ஏனெனில், கடந்த 15-வது மக்களவையில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பேசும் வாய்ப்பு கிடைக்க ஒரு வருடம் ஆனது. ஆனால், இந்த முறை முதல் தொடரிலேயே எனக்கு பூஜ்ஜிய நேரத்தில் மூன்றாவது முறையாக பேசும் வாய்ப்பு கிடைத்தமைக்கு நன்றி’ எனத் தெரிவித்தார்.

மாநிலங்களவையின் செயல் பாடுகள் சுமார் 98 சதவீதமாக உள்ளது. இதை மிஞ்சும் வகையில் மக்களவை இந்த முறை ஒருமுறை கூட ஒத்தி வைக்கப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in