கர்நாடக அரசியல் சிக்கல்: ராஜினாமா பற்றி சபாநாயகர் முடிவெடுக்கலாம்; வாக்களிக்க அதிருப்தி எம்எல்ஏக்களை நிர்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடக அரசியல் சிக்கல்: ராஜினாமா பற்றி சபாநாயகர் முடிவெடுக்கலாம்; வாக்களிக்க அதிருப்தி எம்எல்ஏக்களை நிர்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர்  அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என உத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது, அதிருப்தி எம்எல்ஏக்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரின் ராஜினாமாவை ஏற்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசை ஆதரித்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் கடந்த இரு வாரங்களில் அடுத் தடுத்து ராஜினாமா செய்தனர். மும்பையில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் பைரத்தி பசவராஜ், விஸ்வநாத் உள்ளிட்ட 15 பேர் தங்களது ராஜினாமாவை ஏற்க சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த உச்ச நீதிமன் றம், அதிருப்தி எம்எல்ஏக்கள் கடந்த 12-ம் தேதி பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் முன்னிலையில் நேரில் ஆஜராகி ராஜினாமா கடி தம் அளிக்க உத்தரவிட்டது. இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர்.

ரோஷன் பெய்க், சுதாகர் உள்ளிட்ட மேலும் 5 எம்எல்ஏக்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்க சட் டப்பேரவைத் தலைவருக்கு உத்தர விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, 15 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமை யிலான அமர்வு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட‌ தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “எம்எல்ஏக்களின் ராஜினாமா கடித விவகாரத்தில் பேரவைத் தலைவர் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என நாங்கள் உத்தரவிட முடியாது. இதனை சட்டரீதியாக மட்டுமே அணுக முடியும். அதன்படி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வ‌ழங்கப்படும்''என்றார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகருக்கு அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என உத்தரவு எதையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது. அதேசமயம் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அதிருப்தி எம்எல்ஏக்களின் சொந்த விருப்பம். வாக்கெடுப்பில் கலந்து கொண்டே ஆக வேண்டும் என நாங்கள் நிர்பந்திக்க முடியாது.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in