

அமர்நாத் யாத்திரை தொடங்கி யுள்ள நிலையில், ராணுவ சீருடை அணிந்து, துப்பாக்கி ஏந்தியபடி 11 இளம் காஷ்மீர் தீவிரவாதிகளின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாயின. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த புகைப்படங்கள் கடந்த 2 நாட்களாக பேஸ்புக்கில் இடம் பெற்றிருந்தன. பின்னர் காணாமல் போயின. இவர்களது புகைப்படங் களை ஆய்வு செய்தபோது, தடை செய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாஹி தீன் தீவிரவாத அமைப்பில் சமீபத்தில் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அமர்நாத் யாத்திரை தொடங்கி யுள்ள நிலையில் இந்தப் புகைப் படம் வெளியானதால், ராணுவ சீருடையுடன் தீவிரவாதிகள் ஊடுருவ சதித் திட்டம் தீட்டியிருக் கலாம் என்ற சந்தேகம் எழுந்துள் ளது. இதையடுத்து, யாத்திரை நடைபெறும் அனைத்து பகுதிக ளிலும் சீருடையில் தீவிரவாதிகள் யாரேனும் வருகிறார்களா என கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்த நபர்கள் பற்றிய விவரங்களை தருமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் பாதுகாப் புப் படை கேட்டுள்ளது.