கொல்லப்பல்லி அணையில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு

கொல்லப்பல்லி அணையில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு
Updated on: 
1 min read

அனந்தபூர்: ஆந்திர மாநிலம், ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் துர்காபேட்டையை சேர்ந்தவர் காயத்ரி (50). இவரது மகள் அஸ்வினிக்கு சமீபத்தில் திருமணமானது. இவர் பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்தார்.

தசரா விடுமுறை என்பதால் அஸ்வினி தனது தாய் வீட்டுக்கு வந்தார். நேற்று காலை காயத்ரி, அவரது மகள் அஸ்வினி, காயத்ரியின் நெருங்கிய தோழிகள் உள்ளிட்ட 5 பேரும் கொல்லப்பல்லி அணைக்கு சென்றனர். அனைவரும் அணையில் இறங்கினர். ஆழம் அதிகமாக இருந்ததால், அனைவரும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து சென்ற மீட்புக் குழுவினர் 5 பேரையும் சடலமாக மீட்டனர்.

கொல்லப்பல்லி அணையில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு
ஸ்பெயின் மக்களை வாட்டும் வீடு பிரச்சினை: சொந்த நாட்டிலேயே ‘அகதி’களாகும் துயரமும் பின்னணியும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in