குஜராத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 சிங்கம் 1,670 காட்டெருமை, 87 மான்கள் பலி

குஜராத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 சிங்கம் 1,670 காட்டெருமை, 87 மான்கள் பலி
Updated on
1 min read

கடந்த ஜூன் மாத இறுதியில் அரபிக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களின் கடலோரப் பகுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக, ஷெத்ருஞ்சி ஆறு கரைபுரண்டு ஓடியது. இதனால் குஜராத்தின் அம்ரேலி மற்றும் பாவ்நகர் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல காட்டு விலங்குகள் பலியாயின.

இதுதொடர்பாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்துக்கு மாநில வனத்துறை தலைமை பாதுகாவலர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

அம்ரேலி மற்றும் பாவ்நகர் மாவட்ட வனப்பகுதிகளில் வசித்து வந்த ஏராளமான விலங்குகள் வெள்ளத்தில் சிக்கி பலியாயின. குறிப்பாக, கடந்த 2-ம் தேதி வரை 10 சிங்கங்களின் சடலங்கள், 1,670 காட்டு எருமைகள், 87 மான்கள், 9 பிளாக் பக்ஸ் மற்றும் 6 காட்டுப் பன்றிகள் ஆகியவற்றின் சடலங்கள் மீட்கப்பட்டன.

சிங்கங்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எரிக்கப்பட்டன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in