உத்தர பிரதேசம் முழுவதும் 465 பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து

 உத்தர பிரதேச கல்வி வாரியம்

உத்தர பிரதேச கல்வி வாரியம்

Updated on
1 min read

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசம் முழுவதும் 465 பள்ளிகளின் அங்கீகாரத்தை உத்தர பிரதேச கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது.

2024- 25 மற்றும் 2025- 26 கல்வியாண்டுகளில் இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் யாரும் தேர்வுக்கு ஆஜராகாதது அல்லது வகுப்புகள் நடத்தப்படாததே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து உ.பி. இடைநிலைக் கல்வி வாரிய செயலாளர் பகவதி சிங் கூறுகையில், ”இடைநிலைக் கல்விச் சட்டம் 1921-ன் விதிகளின்படி, ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து 2 ஆண்டுகள் மாணவர்கள் யாரும் தேர்வில் பங்கேற்கவில்லை என்றாலோ அல்லது வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தாலோ, அந்தப் பள்ளிக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் தானாகவே ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும். எனவே 465 பள்ளிகளின் அங்கீகாரம் தானாகவே முடிவுக்கு வந்துள்ளது” என்றார்.

<div class="paragraphs"><p> <em>உத்தர பிரதேச கல்வி வாரியம்</em></p></div>
ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நுழைவாயில் கான்கிரீட் இடிந்து விழுந்து தாய், மகள் படுகாயம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in