சீன சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கினார் மோடி

சீன சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கினார் மோடி
Updated on
1 min read

சீன சமூக வலைத்தளமான சைனா வெய்போவில் பிரதமர் நரேந்திர மோடி கணக்கு தொடங்கியிருக்கிறார்.

அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்கிறார். இந்நிலையில், சீன மக்களுடன் நட்புறவை வளர்த்துக் கொள்ளும் வகையில், அந்நாட்டு சமூக வலைத்தளத்தில் அவர் கணக்கு தொடங்கியிருக்கிறார்.

சைனா வெய்போ சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கியிருக்கும் முதல் இந்தியத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வலைத்தளத்தில் அவர் பதிந்துள்ள முதல் நிலைத்தகவலில், "ஹலோ சீனா. சீன நண்பர்களுடன் உரையாட எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

சைனா வெய்போவில் அவர் கணக்குத் தொடங்கி ஒரு மணி நேரத்தில் 7000 பார்வைகள் கிடைத்துள்ளது.

பிரதமரான பிறகு முதன் முறையாக சீனா செல்கிறார் மோடி. மே 14 முதல் 16 வரை அவர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in