

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மதுராவிலுள்ள விருந்தாவனில் சமஸ்கிருதம் போதிக்கும் குருகுலத்தில், மத்திய பிரதேசத்தின் மனு கட்டாரே (20), விதிஷாவைச் சேர்ந்த தேவன்ஷ் சர்மா (17), கவுஷாம்பியைச் சேர்ந்த ஆர்யன் பாண்டே (17), மீரட்டைச் சேர்ந்த விஷு சர்மா (18) ஆகிய 4 மாணவர்கள் அங்குள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கினர்.
அப்போது தண்ணீர் தொட்டியில் பரவியிருந்த விஷவாயுவை சுவாசித்த 4 பேரும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்கள் 4 பேரும் உயிரிழந்தனர்.