ஐஎஸ்ஐ ஆதரவுடன் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் கடத்திய 4 பேர் கைது

ஐஎஸ்ஐ ஆதரவுடன் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் கடத்திய 4 பேர் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்​தான் உளவு அமைப்பான ஐஎஸ்​ஐ​யுடன் தொடர்​புடைய சர்​வ​தேச ஆயுத கடத்​தல் கும்​பல், வெளி​நாட்டு ஆயுதங்​களை பஞ்​சாப் எல்​லைப் பகு​திக்கு ட்ரோன்​கள் மூலம் அனுப்​பு​கிறது. இவை நாடு முழு​வதும் குற்ற நடவடிக்​கை​களில் ஈடு​படும் தாதா கும்​பல்​களுக்கு விநி​யோகிக்​கப்படுகிறது.

இது தொடர்​பாக கிடைத்த உளவுத் தகவலை​யடுத்​து, டெல்லி ரோஹினி பகு​தி​யில் டெல்லி போலீ​ஸார் காத்​திருந்​தனர். அவ்வழியாக வந்த ஒரு வெள்ளை நிற காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் இருந்த 8 வெளி​நாட்டு கைத்​துப்​பாக்​கி​கள், 84 தோட்​டாக்​களை பறி​முதல் செய்த போலீ​ஸார் காரில் இருந்த இரு​வரை​யும் கைது செய்​தனர்.

இவர்​களிடம் நடத்​திய விசா​ரணை அடிப்​படை​யில் மேலும் 2 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அவர்​களிட​மும் 2 கைத்​துப்​பாக்​கி​கள் மற்​றும் தோட்​டாக்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இந்த துப்பாக்கிகள் சீனா மற்றும் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐஎஸ்ஐ ஆதரவுடன் ட்ரோன் மூலம் ஆயுதங்கள் கடத்திய 4 பேர் கைது
சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை: ம.பி.யில் 36 பேரிடம் விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in