ரேடியோவில் மோடியின் அடுத்த நிகழ்ச்சி ஏப்.26-ல் ஒலிபரப்பு

ரேடியோவில் மோடியின் அடுத்த நிகழ்ச்சி ஏப்.26-ல் ஒலிபரப்பு
Updated on
1 min read

மாதந்தோறும் ‘மனதில் உள்ளதைப் பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி நிலையம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

அதன்படி கடைசியாக கடந்த மார்ச் 22-ம் தேதியன்று அவர் விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசினார்.

இந்நிலையில், ஏப்ரல் 26-ல் மோடியின் அடுத்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. மோடியே தனது ட்விட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த முறை அவர் எந்தப் பிரச்சினையை முன் வைத்து பேசவிருக்கிறார் என ஏதும் குறிப்பிடவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in