ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை: விசாரணைக்கு ராஜ்நாத் உத்தரவு

ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை: விசாரணைக்கு ராஜ்நாத் உத்தரவு
Updated on
1 min read

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆம் ஆத்மி பேரணியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லி காவல் ஆணையர் பி.எஸ்.பாஸ்ஸியிடம் அவர் பேசி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று மதியம் 2 மணியளவில் ஆம் ஆத்மி பேரணியில் அர்விந்த் கேஜ்ரிவால் இருக்கும் போது கஜேந்திர சிங் என்ற விவசாயி மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர், ஆனால் மருத்துவர்கள் கஜேந்திர சிங் ஏற்கெனவே இறந்து விட்டதாக அறிவித்தனர். | தொடர்புடைய முழுமையான செய்தி:>நிலச் சட்ட எதிர்ப்பு: ஆஆக பேரணியில் விவசாயி தற்கொலை |

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in