இந்தியாவில் 5 ஆண்டுகளில் சைபர் மோசடியை தடுக்க 3,718 செயலிகள் முடக்கம்

இந்தியாவில் 5 ஆண்டுகளில் சைபர் மோசடியை தடுக்க 3,718 செயலிகள் முடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த 5 ஆண்​டு​களில் சைபர் மோசடியைத் தடுக்க 3,718 செல்​போன் செயலிகள் முடக்​கப்​பட்​ட​தாக​வும் இதனால் பொது​மக்​களின் ரூ.11,158 கோடி மோசடி தடுக்​கப்​பட்​ட​தாக​வும் மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

பொது​மக்​களை ஏமாற்​ற பயன்​படுத்​தப்​படும் சட்​ட​விரோத செயலிகளை கண்​டறிந்து தடை செய்ய மத்​திய அரசு மேற்​கொண்​டுள்ள நடவடிக்​கைகள் குறித்து பெங்​களூரு மத்​திய தொகுதி பாஜக உறுப்​பினர் பிசி மோகன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்​திய உள்​துறை இணை​யமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் மக்​களவை​யில் எழுத்து மூலம் அளித்த பதில்: கடந்த ஜூன் வரை், மோசடி​யான கடன் செயலிகள் உட்பட மொத்​தம் 3,718 செல்​போன் செயலிகள், தகவல் தொழில்​நுட்​பச் சட்​டம், 2000-ன் படி முடக்​கப்​பட்​டுள்​ளன.

காவல் துறை வேண்டுகோளின்படி், 15.75 லட்​சத்​துக்​கும் அதிகமான சிம் கார்​டு​களும், 5.77 லட்​சம் ஐஎம்இஐ எண்​களும் முடக்​கப்​பட்​டுள்​ளன. சைபர் மோசடி செய்​பவர்​களால் பொது​மக்களின் பணம் கொள்​ளை​யடிக்​கப்​படு​வதைத் தடுக்க, I4சி அமைப்​பால் இயக்​கப்​பட்​டு, நிதி மோசடிகளை உடனடி​யாகப் புகாரளிப்​ப​தற்​காக 2021-ல் தொடங்​கப்​பட்ட சைபர் நிதி மோசடி புகார் மற்​றும் மேலாண்மை அமைப்பு (சிஎப்​சிஎப்​ஆர்​எம்​எஸ்) CFCFRMS உதவி​யாக இருந்​தது. இதுவரை 32.80 லட்​சத்​துக்​கும் அதிக​மான புகார்​களின் மூலம், பொது​மக்​களின் ரூ.11,158 கோடிக்கும்​ அதி​க​மான தொகை சேமிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் 5 ஆண்டுகளில் சைபர் மோசடியை தடுக்க 3,718 செயலிகள் முடக்கம்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து தனித் தீர்மானம்: திமுக ஆதரவுடன் பேரவையில் நிறைவேற்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in