இமாச்சல சட்டப்பேரவையில் நடனமாடிய முதல்வர்

இமாச்சல சட்டப்பேரவையில் நடனமாடிய முதல்வர்
Updated on
1 min read

இமாச்சல பிரதேச சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஏற்றவாறு அம்மாநில முதல்வர் வீரபத்ர சிங் நடனமாடினார்.

இமாச்சல சட்டப்பேரவையில் முக்கிய எதிர்க்கட்சியான பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுப்படனர். முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் தலைமையிலான இளைஞர் காங்கிரஸ்காரர்களின் நில அபகரிப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் நடந்த மோதலை குறிப்பிட்டு பாஜக எம்.எல்.ஏக்கள் ரகளையில் ஈடுப்பட்டனர்.

முதல்வர் வீரபத்ர சிங்குக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்ப, அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்களை கட்டுப்படுத்த அவர்களது கோஷத்துக்கு ஏற்றவாறு பாரம்பரிய நடனமாடி அனைவரது கவனத்தை திசைத் திருப்ப முயற்சித்தார்.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி செய்த போதிலும் வீரபத்ர சிங் உற்சாகத்துடன் தனது நடனத்தை தொடர்ந்தார்.

முதல்வர் வீரபத்ர சிங்கின் மகளுக்கும் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் மகனுக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. அதனால் முதல்வர் திருமண விழா உற்சாக நிலையிலேயே இருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in