

சி.பி.எம். கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர், செயற்குழு உறுப்பினர் கள் யார் என்ற விவரங்கள் அனைத் தும் அக்கட்சியின் 21வது கட்சி மாநாட்டில் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.
வருகிற ஏப்ரல் மாதம் சி.பி.எம்.மின் 21வது கட்சி மாநாடு விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிற்சங்க அமைப்புகளில் இருந்து மத்தியக் குழுவுக்கு உறுப் பினர்கள் தேர்வு செய்யப்படு வார்கள். பின்னர், அந்தக் குழு செயற் குழு உறுப்பினர்களையும், கட்சி பொதுச்செயலாளரையும் தேர்வு செய்யும்.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி யிடம் கேட்டபோது, "கட்சி பொதுச் செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் விவரங்கள் அனைத்தும் கட்சி மாநாட்டில்தான் தெரிய வரும்" என்றார்.
கட்சியில் பதவி வகிப்பவர்களுக் கும் மூன்று ஆண்டுகள் பதவிக் காலம் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற் போதைய கட்சி பொதுச்செயலாள ராகப் பதவி வகிக்கும் பிரகாஷ் காரத்தின் பதவிக்காலம் முடிய இருப்பதால் அவருக்குப் பதிலாக சீதாராம் யெச்சூரி அல்லது பி.வி.ராகவுலு அல்லது எஸ்.ராமச் சந்திரன் பிள்ளை ஆகியோரில் யாரேனும் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.