வருமான வரித்துறை ஒப்புக்கொண்டபடி சசிகலா வருமானத்தை ரூ.15 கோடியாக ஏற்க வேண்டும்: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டில் வாதம்

வருமான வரித்துறை ஒப்புக்கொண்டபடி சசிகலா வருமானத்தை ரூ.15 கோடியாக ஏற்க வேண்டும்: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டில் வாதம்
Updated on
2 min read

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 2-வது குற்றவாளி யாக சேர்க்கப்பட்டுள்ள சசிகலா வுக்கு ரூ.15 கோடி வருமானம் இருந்தது. த‌மிழக லஞ்ச ஒழிப் புத்துறை போலீஸார் ஏற்க மறுத்த அந்த வருமானத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவரது வழக்கறிஞர் ஆர்.பசன்ட் வாதிட்டார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

சசிகலாவின் வழக்கறிஞர் ஆர்.பசன்ட் 6-வது நாளாக வாதிட்டதாவது:

1997-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு செய்தனர். சசிகலா தொடர்புடைய‌ சசி எண்டர்பிரைசஸ், ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ஜெ ஃபார்ம் ஹவுஸ் ஆகிய‌ நிறுவனங்களுக்காக சென்னையில் அடையார், நீலங்கரை, ராஜா நகர் ஆகிய இடங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதனை அரசு தரப்பு சாட்சி கோவிந்தன் மதிப்பீடு செய்துள்ளார்.

1991-93 காலக்கட்ட சொத்துகள் தொடர்பாக வாய்மொழியாகவும்,1994-96 காலக்கட்ட சொத்துகள் தொடர்பாக எழுத்துப்பூர்வமாகவும் அவரிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளது. சாட்சிய சட்டம் 93-ம் பிரிவின்படி இத்தகைய முரண்பட்ட சாட்சி யத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள கூடாது என கூறப்பட்டுள்ளது.

எனவே பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அவரது வாக்குமூலத்தில் இருந்து ரூ 80.75 லட்சத்தை சசிகலாவின் சொத்தாக கணக்கில் ஏற்றுக்கொண்டது. ஆனால் வருமான வரித்துறையின் கணக்கின்படி சசிகலாவிடம் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் இருந்தது. இதனை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கணக்கிடாதது ஏன்?

அதிகமாக கைவசமிருந்த ரூ. 31 கோடி

1991-96 காலக்கட்டத்தில் வரு மான வரித்துறை கணக்குகளின்படி சசிகலாவுக்கு ரூ.31 கோடி மதிப் பிலான சொத்துகள் இருந்துள்ளது. அவர் தனது வருமானத்தில் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருந்தார். அதனால்தான் வருமான வரித்துறை வழக்கு காலத்தில் சசிகலா தனது வருமானத்துக்கு அதிகமாக 27.2 சதவீதம் சொத்துக் குவித்ததாக கூறியுள்ளது.

சசிகலா தனது சொத்தான ரூ.31 கோடியில் ரூ 15 கோடி தனியார் நிறுவனங்களான சொத்து களும், மீதியை கைவச‌ம் வைத் திருந்தார். ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதனை கருத்தில் கொள்ளாமல், ரூ.80.75 லட்சத்தை மட்டும் வழக்கில் காட்டி யுள்ளனர். எனவே வருமான வரித் துறை ஏற்றுக்கொண்ட ரூ.15 கோடியை சசிகலாவின் சொத்தாக ஏற்க வேண்டும்''என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி,''ஏன் இந்த பணத்தை கருத்தில் கொள்ளவில்லை.விசார ணையின் போது இது குறிப்பிடப் பட்டதா?''என கேள்வி எழுப்பினார். அதற்கு அரசு வழக்கறிஞர் பவானிசிங்,''விசாரணை காலக் கட்டத்தில் நான் அரசு வழக்கறிஞ ராக இருக்கவில்லை.இது பற்றி விசாரணை அதிகாரிகளிடம்தான் விசாரிக்க வேண்டும்.தேவைப் பட்டால் அந்த தொகையை வழக்கில் ஏற்றுக்கொள்ளலாம்''என்றார்.

அதற்கு நீதிபதி,''அரசு வழக் கறிஞர் மேல்முறையீட்டில் அவ்வாறு ஏற்றுக்கொள்ள கூறுவது கண்டனத்திற்குரியது. விசாரணை காலக்கட்டத்தில் விடுபட்ட சொத்துகளை தற்போது கணக்கில் கொள்ளமுடியாது'' எனக்கூறி, வழக்கை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in