காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தலைமறைவாக இருந்த ஜே.இ.எம். தீவிரவாதி சைபுல்லா உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக, சைபுல்லா 20 முறை பிடியில் சிக்காமல் தப்பியதாக கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து 2 ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. உயிரிழந்த தீவிரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள். இந்த ராணுவ வேட்டையின் போது கே 9 படைப் பிரிவைச் சேர்ந்த நாய் டைசன் காயம் அடைந்தது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் உயிரிழப்பு
கொடைக்கானல்: தொழிலதிபரை கொன்ற கும்பல் தலைமறைவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in