காஷ்மீரில் தீவிரவாதிகளின் 3 புகலிடங்கள் தகர்ப்பு

காஷ்மீரில் தீவிரவாதிகளின் 3 புகலிடங்கள் தகர்ப்பு
Updated on
1 min read

ஜம்மு: ஜம்​மு-​காஷ்மீரின் கதுவா மாவட்​டத்​தில் உள்ள பில்ல​வார் பகு​தி​யில் தீவிர​வா​தி​களைத் தேடும் பணி​யில் நேற்று பாது​காப்​புப் படை​யினர், போலீ​ஸார் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதி​காலை ஒரு மறை​விடத்​தில் பதுங்​கி​யிருந்த தீவிர​வா​தி​கள், பாது​காப்​புப் படை​யினர் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்தியபடி தப்​பிவிட்​டனர்.

இதையடுத்து பாது​காப்​புப் படை​யினர் தொடர்ந்து தேடுதல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். அப்​போது பில்​லவார் பகு​தி​யில் கமாத் நல்​லா, காலா​பான், தானு பரோல் ஆகிய இடங்​களில் இருந்த தீவிர​வா​தி​களின் மறை​விடங்​களை பாது​காப்​புப் படை​யினர் தகர்த்து அழித்​தனர்.

அந்த இடங்​களில் இருந்து வெடிபொருட்​கள், உலர்​பழங்கள், நெய் அடங்​கிய பிளாஸ்​டிக் டப்​பா, கையுறைகள், தொப்​பி, போர்​வை, தார்ப்​பாய் உள்​ளிட்​ட​வற்றை போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். கதுவா மாவட்ட மூத்த போலீஸ் எஸ்​.பி. மோஹித்தா சர்மா தலை​மை​யில் போலீ​ஸாரும், பாது​காப்​புப் படை​யினரும் இந்​தத் தேடு​தல் வேட்​டை​யில்​ ஈடு​பட்​டனர்​.

காஷ்மீரில் தீவிரவாதிகளின் 3 புகலிடங்கள் தகர்ப்பு
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு தெறிப்புத் தருணங்கள்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in