கர்நாடகா: காவிரி வனவிலங்கு சரணாலய பகுதியில் வேட்டையாட சென்றதாக தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை

வனத்துறையினர் அலுவலகத்தை சூறையாடிய கிராமத்தினர்
அந்​தோனி​சாமி, லாசர் குமார், ஜான்​ரோஸ் பீட்​டர்

அந்​தோனி​சாமி, லாசர் குமார், ஜான்​ரோஸ் பீட்​டர்

Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில் காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது.

இங்​குள்ள தோமை​யார்​பாளை​யம் அருகே சிலர் சட்​ட​ விரோத​மாக மான்​களை வேட்​டை​யாடு​வ​தாக நேற்​று​முன்​தினம் இரவு வனத்​துறை​யினருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, ஷிவ​ராஜ், சேகரை​யா, அனில்​கு​மார் உள்​ளிட்ட 7 பேர் இரு குழுக்​களாக பிரிந்து சென்று கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள வனப்​பகு​தி​யில் வனத்​துறை​யினர் ரோந்து பணி​யின்​போது, மறைந்​திருந்த 4 தமிழர்கள், அவர்​கள் மீது நாட்டு துப்​பாக்​கி​யால் தாக்​குதல் நடத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, வனத்​துறை​யினர் நடத்​திய துப்​பாக்கி சூட்​டில் ம‌ரியமங்​கலம் கிராமத்தை சேர்ந்த அந்​தோனி​சாமி (50), ஜான்​ரோஸ் பீட்​டர் (42), லாசர் குமார் (33) ஆகிய 3 பேர் உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த மகிமை தாஸ் (48) மைசூரு​வில் உள்ள அரசு மருத்துவமனை​யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் உறவினர்​கள் மற்​றும் கிராம மக்​கள் கொள்​ளே​கால், ஹனூர், தோமை​யார் பாளை​யம், ஜகன்​னாத தொட்டி உள்​ளிட்ட இடங்​களில் உள்ள‌ வனத்​துறை அலு​வல​கத்தை அடித்து நொறுக்​கினர்.

போலீஸார் குவிப்பு

இந்த சம்​பவத்தை கண்​டித்து 100-க்​கும் மேற்​பட்​டோர் மைசூரு, மேட்​டூர், சத்​தி​யமங்​கலம் ஆகிய இடங்​களுக்கு செல்​லும் சாலைகளை மறித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதனால் அங்கு பதற்​றம் ஏற்​பட்​ட​தால் போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டு, பலத்த பாது​காப்​பு போட‌ப்​பட்​டுள்​ளது.

விசா​ரணைக்கு உத்​தரவு

கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் கூறுகை​யில், “இந்த தாக்​குதலில் 3 பேர் உயி​ரிழந்​திருக்​கின்​றனர். காயமடைந்த ஒரு​வர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளார். 3 பேரின் உடல்​களும் மைசூரு கே.ஆர்​.மருத்​து​வ​மனைக்கு பிரேத பரிசோதனைக்​காக கொண்டு செல்​லப்​பட்​டுள்​ளது.

அவர்​கள் நடத்​திய தாக்​குதலில் வனத்​துறையை சேர்ந்த ஒரு​வர் காயமடைந்​திருக்​கிறார். கொல்​லப்​பட்​ட​வர்​களிடம் இருந்து 2 நாட்டு துப்​பாக்​கி​கள், மான் இறைச்சி ஆகியவை பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த சம்​பவம் குறித்து விசா​ரணை நடத்தி அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு சாம்​ராஜ்நகர் மாவட்ட அதி​காரி​களுக்​கு உத்​தர​விட்​டுள்​ளேன்​” என்​றார்​.

‘மாடு மேய்க்க சென்றார்கள்’

கொள்ளேகாலில் போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் கூறுகையில், “கொல்லப்பட்ட 3 பேரும் மாடு மேய்க்க சென்றவர்கள். இரவில் வனப்பகுதியிலே தங்கி மாடு மேய்ப்பார்கள். அவர்களை மான் வேட்டைக்கு சென்றதாக சந்தேகப்பட்டு வனத்துறையினர் நெஞ்சு பகுதியில் சுட்டு கொன்றிருக்கிறார்கள்.

உயிரிழந்த 3 பேருக்கும் உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம். சம்பந்தப்பட்ட வனத்துறையினரை பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

<div class="paragraphs"><p>அந்​தோனி​சாமி, லாசர் குமார்,&nbsp;ஜான்​ரோஸ் பீட்​டர்</p></div>
வந்தே மாதரம் பாடலை பாட சோனியா ஆட்சேபம் தெரிவித்தாரா? - பாஜக குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in