புனேயில் பயங்கர நிலச்சரிவு: ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு

புனேயில் பயங்கர நிலச்சரிவு: ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புனே: ம​கா​ராஷ்டிராவின் பல்​வேறு பகு​தி​களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரு​கிறது.

மும்​பை, புனே, தானே மற்​றும் ராய்​காட் ஆகிய மாவட்​டங்​களில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்​கப்​ பட்​டுள்​ளது. புனே மாவட்டத்​தின் மாவல் தாலுகா​வுக்கு உட்​பட்ட பாட்​டன் கிராமத்தில் உள்ள மலைப் பகு​தி​யில், தொடர் மழை​ காரண​மாக நேற்று அதி​காலை நிலச்​சரிவு ஏற்​பட்டு பாறை​களும் மண்​ணும் குடி​யிருப்​புப் பகு​திக்​குள் சரிந்து விழுந்​தது.

இதில் சுமார் 5 வீடு​கள் முற்​றி​லும் இடி​பாடு​களுக்​குள் புதைந்​தன. தூங்​கிக் கொண்​டிருந்த 30-க்​கும்மேற்​பட்​டோர் இடி​பாடு​களில் சிக்கிக் ​கொண்​டனர். தகவலறிந்து வந்த தேசிய பேரிடர் சிறப்பு மீட்புப் படை, மீட்​புப் பணி​யில் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளது.

ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த நந்து திக்​கோனே (60), மௌலி திக்கோனே (30), அனிதா திக்​கோனே (55) ஆகிய மூவரின் உடல்கள் மீட்​கப்​பட்​டுள்​ள​தாக லோனா​வாலா பிரிவு காவல்​துறை துணை கண்​காணிப்​பாளர் கஜானன் தோம்பே தெரி​வித்​துள்​ளார்.

புனேயில் பயங்கர நிலச்சரிவு: ஒரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழப்பு
திருச்சியில் ஹவாலா கும்பலுடன் தொடர்புடைய 6 பேர் கைது: அமலாக்கத் துறை, என்ஐஏ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in